நகைச்சுவை ஓவியர் _ கார்ட்டூனிஸ்டுகள் அமைவதில் 'மாலி'யிலிருந்து தொடங்கி
ஆனந்த நிறுவனத்துக்கு ஒரு தனித்த அதிர்ஷ்டம் உண்டு.
மாலி, ராஜு, கோபுலு
என்று வழிவழி வந்த அந்த அதிர்ஷ்டத்தின் இன்றைய ஒளிமயமான சின்னம் 'மதன்'.
ஜோக்குகளுக்கு 'ராஜு' ஓவியம் வரைவதை நான் சிறுவயதில் அருகே இருந்து
கவனித்திருக்கிறேன்.
படுவேகத்தில் மனிதர்களின் ஆக் ஷன்களை அவர்
வரைவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ராஜுவுக்குப் பிறகு மதனிடம்தான்
அந்த வேகத்தைப் பார்த்தேன்.
அரசியல் கார்ட்டூன்களிலும் சரி,
ஜோக்குகளிலும் சரி... மதன் வீச்சு _ இருபத்தோராம் நூற்றாண்டைத் தொட்டுவிட்ட
சாதனை புரிந்திருக்கிறது.
இணை ஆசிரியராக பொறுப்புகளை என்னுடன்
பகிர்ந்துகொண்ட மதனின் ஜோக்குகளைத் தொகுத்து வழங்குவது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது.
This product was added to our catalog on Tuesday 20 July, 2010.